கோடிக்கணக்கான மக்களை அடையும் அற்புத சாட்சி!
|
கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின்
நாமத்தில் உங்கள் யாவருக்கும் எங்கள் நல் வாழ்த்துக்கள். எனது கணவர் திரு சுரேஷ்
ஜான்சன் அவர்களும் நானும் இந்தியாவில் ஒரு
வங்கியில் வேலை பார்த்து வருகிறோம். கர்த்தராகிய இயேசு கிறிஸ்து, ஒரு மரணத்துக்கேதுவான
இரத்தக்கசிவு நோயிலிருந்து எனது கணவரைக் குணமாக்கினார்(ITP). உயிர்த்தெழுந்த இயேசுவின் வல்லமையினால் எனது கணவர் உயிரோடு,
பூரண சுகத்தோடு இருக்கிறார். உண்மையாகவே, இயேசு கிறிஸ்து இன்றும் ஜீவிக்கிறார்; இதற்கு
நாங்கள் சாட்சிகளாக இருக்கிறோம். அற்புதத்தின் நாட்கள் இன்னும் முடிந்து போகவில்லை.
அவர் இன்னும் அற்புதங்களையும் அடையாளங்களையும் செய்துகொண்டே இருக்கிறார். இந்த இணைய தளத்தின் மூலம்
எவ்வாறு கர்த்தராகிய இயேசு கிறிஸ்து எனது கணவருக்கு உயிர் கொடுத்தாரென்றும் எவ்வாறு
எங்களை அந்த மரண இருளின் பள்ளத்தாக்கில் அற்புதமாக நடத்தினாரென்றும் பகிர்ந்து கொள்வதில்
மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். இந்த இணைய தளம் அனேகரை
கிறிஸ்துவிடம் வழி நடத்துமென்றும், அனேகருடைய விசுவாசத்தை வர்த்திக்கச்செய்யுமென்றும்
அனேகருடைய ஆவிக்குரிய வளர்ச்சியை மேம்பட வைக்குமென்றும் நம்புகிறோம். இந்த இணையதளத்தை,
மரணத்தை ஜெயமாக வென்று இன்றும் நமக்கு ஜெயத்தைத் தருகிற னமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின்
பாத கமலங்களில் காணிக்கையாக அர்ப்பணிக்கிறேன். அல்லேலூயா! இந்த இணையதளத்தின் மூலம்
கர்த்தர் எவ்வாறு ஒரு குடும்பத்தை ஜீவனுள்ள சாட்சியாக வைத்துள்ளார் என்பதை உலகத்துடன் பகிர்ந்து கொள்கிறோம்.
கர்த்தர் எங்களை அனேக விதத்தில் பயன்படுத்துகிறார்; அவர் எங்களுக்கு ஒரு இசை
ஊழியத்தைக் கொடுத்திருக்கிறார்; துதியின் ஊழியத்தைக் கொடுத்திருக்கிறார்;
எழுத்து ஊழியத்தைக் கொடுத்திருக்கிறார்; ஆலோசனையின் ஊழியத்தைக் கொடுத்திருக்கிறார்; அடுக்கிக்கொண்டே போகலாம்;
எங்களது ஆசீர்வாதங்களை, அனுபவங்களை, கர்த்தருடைய வழி நடத்துதலை, எல்லாவற்றுக்கும்
மேலாக அவருடைய மிக அருமையான பிரசன்னத்தை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி
அடைகிறோம். கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக! |
|
|||||||||
|
அருணோதயா |
|
|||||||||